2026இல் 19.6 இலட்சத்தைக் கடந்தது இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை – இந்தியா தொடர்ந்து முதலிடம்!

2026இல் 19.6 இலட்சத்தைக் கடந்தது இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை – இந்தியா தொடர்ந்து முதலிடம்!

நவம்பர் மாதத்தின் முதல் 15 நாட்களில் 102,469 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, இந்தியா தொடர்ந்து இலங்கையின் பிரதான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் நாடாகத் திகழ்கிறது. குறித்த காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 31,185 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது மொத்த வருகையில் சுமார் 30 சதவீதமாகும்.

ரஷ்யாவிலிருந்து 9,772 பேரும், பிரித்தானியாவிலிருந்து 6,898 பேரும், ஜேர்மனியிலிருந்து 6,574 பேரும், சீனாவிலிருந்து 5,147 பேரும் வருகை தந்துள்ளனர்.

இதற்கமைய, 2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,964,773 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் இந்தியா 530,810 சுற்றுலாப் பயணிகளுடன் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது.

பிரித்தானியாவிலிருந்து 180,027 பேரும், சீனாவிலிருந்து 128,887 பேரும், ஜேர்மனியிலிருந்து 111,879 பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து 100,030 பேரும் வருகை தந்துள்ளனர்.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் புள்ளிவிபரங்களின்படி, குறித்த காலப்பகுதியில் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகளை வழங்கிய முதல் ஐந்து நாடுகளாக இவை பதிவாகியுள்ளன.

manel