காசல்ரி நீர்த்தேக்கத்தில் பிளாஸ்டிக், பொலித்தீன் கழிவுகள் குவிப்பு!

காசல்ரி நீர்த்தேக்கத்தில் பிளாஸ்டிக், பொலித்தீன் கழிவுகள் குவிப்பு!

தேசிய மின்சாரக் கட்டமைப்புக்கு மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக நீர் வழங்கும் முக்கிய நீர்த்தேக்கமான காசல்ரி நீர்த்தேக்கத்தில், பெருமளவிலான பிளாஸ்டிக், பொலித்தீன் உள்ளிட்ட திண்மக் கழிவுகள் மிதந்து வருவதாக அங்கு மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

தீபாவளி பண்டிகைக் காலத்தில் ஹட்டன் பகுதியில் பெய்த கடும் மழையுடன், நகரில் தற்காலிக வியாபாரத்தில் ஈடுபடுவதற்காக வெளிப் பகுதிகளிலிருந்து வந்தவர்களால் வீசப்பட்ட பிளாஸ்டிக், பொலித்தீன் உள்ளிட்ட கழிவுகள் மற்றும் சில வியாபாரிகளால் அகற்றப்படும் திண்மக் கழிவுகள் நகரின் ஊடாக ஓடும் நீரோடைகளில் வீசப்பட்டுள்ளன.

அதேவேளை, ஹட்டன் பிரதேசத்தின் சில குடியிருப்பாளர்கள் தினசரி வீடுகளில் இருந்து அகற்றும் குப்பைகளையும், ஹட்டன் – டிக்கோயா நகர வியாபாரிகள் நகரின் பின்புறமாக ஓடும் டிக்கோயா ஆற்றில் கொட்டுவதால், அந்தக் கழிவுகள் நீரோட்டத்தின் வழியாக காசல்ரி நீர்த்தேக்கத்தைச் சென்றடைந்து குவிவதாக மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதனால் நீர்த்தேக்கத்தில் பாரிய சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், காசல்ரி நீர்த்தேக்கத்திற்கு பிரதானமாக நீர் கொண்டுவரும் ஹட்டன் ஓயாவில் மிதந்து வரும் திண்மக் கழிவுகளைத் தடுக்க நீர்த்தேக்கத்தில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வலையும் தற்போது சேதமடைந்துள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர்.

இதன் காரணமாக பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகள் நீர்த்தேக்கம் முழுவதும் பரவி காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

காசல்ரி நீர்த்தேக்கத்தை மையமாகக் கொண்டு பல சுற்றுலா விடுதிகள் அமைந்துள்ள நிலையில், இந்த சுற்றுச்சூழல் பாதிப்பு நீர்த்தேக்கத்தின் இயற்கை அழகையும் பாதித்துள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அத்துடன், மீன்பிடிக்காக விரிக்கும் வலைகளில் பிளாஸ்டிக் மற்றும் ஏனைய கழிவுகள் சிக்குவதால், தமது பெறுமதியான மீன்பிடி வலைகளும் சேதமடைவதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

manel

Related Posts