விமானப் போக்குவரத்துத் துறையில் பெண்களின் எதிர்காலத் தலைமுறையைஊக்குவிக்கும் சிறப்புத் திட்டம்!

விமானப் போக்குவரத்துத் துறையில் பெண்களின் எதிர்காலத் தலைமுறையைஊக்குவிக்கும் சிறப்புத் திட்டம்!

இலங்கை விமானப் போக்குவரத்துத் துறையில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் நோக்கில், ஸ்ரீலங்கன் ஏவியேஷன் கல்லூரியினால் பாடசாலை மாணவிகளுக்கான விசேட நிகழ்ச்சித்திட்டமொன்று அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

‘Women in Aviation International – Sri Lanka Chapter’ (WAISL) அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘Girls in Aviation Day 2026’ நிகழ்ச்சியில், இலங்கையின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த 50 பாடசாலை மாணவிகள் கலந்துகொண்டனர்.

விமானப் போக்குவரத்து மற்றும் விண்வெளித் துறைகளில் கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகள் குறித்து இளம் பெண்களுக்கு விழிப்புணர்வூட்டும் நோக்கில், ‘Girls in Aviation Day’ நிகழ்ச்சி ஆண்டுதோறும் உலகளாவிய ரீதியில் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, ஸ்ரீலங்கன் குழுமத்துக்குச் சொந்தமான அறிவு, அனுபவம் மற்றும் வளங்களைப் பயன்படுத்தி, விமானச் செயற்பாடுகள், விமானப் பொறியியல், பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பில் மாணவிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

manel