பெண் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கம் – 10 உந்துருளிகள் சேதம்!

பெண் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கம் – 10 உந்துருளிகள் சேதம்!

ஹோமாகம, கட்டுவான பகுதியில் பயணித்த சிற்றூந்து ஒன்று வீதியை விட்டு விலகி, அலுவலகம் ஒன்றின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 உந்துருளிகள் மீது மோதியுள்ளது.

சிற்றூந்தை செலுத்திய பெண் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கமே இந்த விபத்துக்குக் காரணம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனினும், 10 உந்துருளிகளும் சேதமடைந்துள்ளன.

சம்பவம் தொடர்பில் ஹோமாகம தலைமையக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

manel