மெஸ்ஸிக்கு காயம் அச்சத்தில் ஆர்ஜென்ரீனா
உலகக் கிண்ணப் போட்டி தொடங்குவதற்கு மூன்று வாரங்களுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், ஆர்ஜென்ரீனா கப்டன் லியோனல் மெஸ்ஸிக்கு திங்களன்று அவரது இடது தொடைப் பின்புறத் தசையில் சோர்வு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை பிலடெல்பியா யூனியனுக்கு எதிராக இன்டர் மியாமி 6-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றபோது, ஃப்ரீ கிக் அடித்த பிறகு ஏற்பட்ட அசௌகரியத்தைத் தொடர்ந்து, 38 வயதான மெஸ்ஸி 73-வது நிமிடத்தில் வெளியேற்றப்பட்டார்.
தசை சோர்வு தொடர்பான அதிகப்படியான சுமையால் மெஸ்ஸி பாதிக்கப்பட்டிருப்பதாக இன்டர் மியாமி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் மீண்டும் உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கான காலக்கெடு, அவரது மருத்துவ செயல்பாட்டு முன்னேற்றத்தைப் பொறுத்தது என்றும் அந்த அறிக்கை மேலும் கூறியது.
போட்டிக்குப் பிறகு, இன்டர் மியாமி மேலாளர் கில்லர்மோ ஹோயோஸ், “கனமான” ஆடுகளத்தில் விளையாடியதால் மெஸ்ஸி சோர்வாக உணர்ந்ததாகக் கூறினார்.
உலகக் கிண்ணப் போட்டி ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை அமெரிக்கா, மெக்சிகோ , கனடா ஆகிய நாடுகளில் நடைபெறும்.

