தோப்பூர் பிரதேச வைத்தியசாலைக்கு புதிய இருமாடிக் கட்டிடம்!

தோப்பூர் பிரதேச வைத்தியசாலைக்கு புதிய இருமாடிக் கட்டிடம்!

மூதூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் பிரதேச வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவு (OPD) உள்ளிட்ட வசதிகளைக் கொண்ட புதிய இரு மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு (27) நடைபெற்றது.

தோப்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்களின் நீண்டகால சுகாதாரத் தேவையை நிறைவு செய்யும் நோக்கில் இந்த புதிய கட்டிடத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதிய மருத்துவமனைக் கட்டிடப் பணிகள் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படவுள்ளன. கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு மற்றும் திணைக்களத்தின் ரூபா 20 மில்லியன் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள முதற்கட்டப் பணிகள் நடப்பு 2026 ஆம் ஆண்டிற்குள் நிறைவு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டப் பணிகளுக்காக ரூபா 35 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதுடன், இதற்கான கட்டுமான ஏற்பாடுகள் அடுத்த ஆண்டில் (2027) தொடங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

இப்புதிய இருமாடிக் கட்டிடத்தின் மூலம் தோப்பூர் பிராந்திய மக்கள் தமக்கான அவசர மற்றும் அத்தியாவசிய மருத்துவச் சேவைகளை தங்குதடையின்றி, நவீன வசதிகளுடன் பெற்றுக்கொள்ள வழிவகுக்கும்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர,
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதாரத் திணைக்கள உயர் அதிகாரிகள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் தோப்பூர் பிரதேச பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

manel