இக்பால் பிரீமியர் லீக் – 2026’ கிரிக்கெட் தொடர் ஆரம்பம்!

‘இக்பால் பிரீமியர் லீக் – 2026’ கிரிக்கெட் தொடர் ஆரம்பம்!அபு அலா திருகோணமலை – குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட இக்பால் நகர் இளைஞர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட “இக்பால் பிரீமியர் லீக் – 2026” மென்பந்து கிரிக்கெட் தொடர் (12) பிரம்மாண்டமான முறையில் ஆரம்பமாகியது.

இப்போட்டித் தொடரின் ஆரம்ப நிகழ்வில், குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.முபாறக் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு இத்தொடரை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

மைதானமே அதிரும் வண்ணம் இளைஞர்களின் உற்சாக முழக்கங்களுடனும், வீரர்களின் விறுவிறுப்பான ஆட்டத்துடனும் ஆரம்பமாகியுள்ள இத்தொடர், விளையாட்டு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இக்பால் நகர் மண்ணில் இளைஞர்களின் ஒற்றுமையையும், விளையாட்டுத் திறனையும் வெளிப்படுத்தும் ஒரு முக்கிய மைல்கல்லாக இந்த IPL-2026 கிரிக்கெட் தொடர் அமையுமென பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

இந்த ஆரம்ப நிகழ்வில் குச்சவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

manel