உலக கிண்ண கால்பந்தாட்ட தொடர் – ஜேர்மனி இலகு வெற்றி

உலக கிண்ண கால்பந்தாட்ட தொடர் – ஜேர்மனி இலகு வெற்றி
Soccer Football - FIFA World Cup 2026 - Group E - Germany v Curacao - Houston Stadium, Houston, Texas, U.S. - June 14, 2026 Germany's Kai Havertz in action with Curacao's Armando Obispo and Livano Comenencia IMAGN IMAGES via Reuters/Troy Taormina

உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரில் குரூப் இ பிரிவில் இடம்பெற்ற லீக் ஆட்டத்தில் வலுவான ஜேர்மனியை குராசோ எதிர்கொண்டது. 

ஆட்டம் தொடங்கிய 6வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் பெலிக்ஸ் நிமிச் கோல் அடித்தார். 

இதையடுத்து ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் குராசோ வீரர் லிவனோ கமெனிசியா கோல் அடித்தார். 

இதனால் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்றது. 

இதையடுத்து ஆட்டத்தை தமக்கு சாதகமாக மாற்றிய ஜேர்மனி வீரர்கள் அடுத்தடுத்து கோல்களை அடித்தனர். 

அதன்படி, நிகோ ஸ்கால்டர்பெக் 38வது நிமிடத்திலும், ஹைய் ஹவெஸ்ட் 45வது நிமிடத்திலும், ஜமல் முசிலா 47வது நிமிடத்திலும், நதினில் பிரவுன் 68வது நிமிடத்திலும், டென்னிஸ் உன்தவ் 78வது நிமிடத்திலும், ஹைய் ஹவெஸ்ட் (2வது கோல்) 88வது நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தினர். 

ஆனால், குராசோ வீரர்கள் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளை ஜெர்மனி வீரர்களும், கோல் கீப்பரும் முறியடித்தனர். 

இதனால் 7 க்கு 1 என்ற அடிப்படையில் ஜேர்மனி இலகுவான வெற்றியை பெற்றது.

manel