குச்சவெளியில் நீண்டநாட்களாக கசிப்பு காய்ச்சிய நபர் பொலிஸ் வலையில்

குச்சவெளியில் அதிரடி நீண்டநாட்களாக கசிப்பு காய்ச்சிய நபர் பொலிஸ் வலையில்

பொறுப்பதிகாரியின் சிறப்பான சேவைக்கு பொதுமக்கள் பாராட்டுதிருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவச்சோலை மற்றும் கும்புறுப்பட்டி ஆகிய பகுதிகளில் மிக நீண்டகாலமாக சட்டவிரோதமான முறையில் கசிப்பு காய்ச்சி விநியோகம் செய்து வந்த பிரதான சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

கும்புறுப்பட்டி, நாவச்சோலை பகுதியைச் சேர்ந்த ‘டேனியல்’ என்றழைக்கப்படும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

இப்பகுதிகளில் நீண்டநாட்களாக இரகசியமான முறையில் கசிப்பு காய்ச்சப்பட்டு வருவதாக குச்சவெளி பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குத் ரகசியத் தகவல் ஒன்று கிடைத்தது.

இத்தகவலின் அடிப்படையில், குச்சவெளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் நேரடித் தலைமையில் பொலிஸ் குழுவினர் அப்பகுதியில் அதிரடிச் சோதனை நடவடிக்கையொன்றை மேற்கொண்டனர்.

இதன்போது, கசிப்பு காய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்பட்ட பெருமளவிலான உபகரணங்கள் மற்றும் கசிப்பு என்பன கைப்பற்றப்பட்டதுடன், பிரதான சந்தேக நபரான டேனியல் என்பவரும் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

குச்சவெளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் இத்தகைய துரிதமான மற்றும் நேர்மையான நடவடிக்கைகள் இப்பகுதியில் குற்றச் செயல்களைப் பெருமளவில் கட்டுப்படுத்தியுள்ளது.

அவரது மிக அழகான, அர்ப்பணிப்புமிக்க சேவைக்கு எங்களது மனமார்ந்த பாராட்டுகள்கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இப்பகுதியில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத செயல்களுக்கு எதிராக பொலிஸார் எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

manel