ரஷ்ய இராணுவத்துக்கு உதவிய நிறுவனங்களுக்கு தடை
ரஷ்ய இராணுவத்துக்கு உதவும் வகையில், செயல்பட்ட மூன்று இந்திய நிறுவனங்கள் உட்பட 45 நிறுவனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது.
ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகள் தீவிரமாக முயற்சித்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அந் நாட்டின் மீது ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதார தடைகளை விதித்தது.
இந்நிலையில் ரஷ்யாவுக்கு உதவும் நிறுவனங்கள் மீது இந்தத் தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

