இசையமைப்பாளர் தேவா குடும்பத்தில் மற்றொரு சோகம்!

பிரபல இசையமைப்பாளர் தேவா கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று காலமானார். அவரது உடல் பூரண அரச மரியாதையுடன் நேற்று முன்தினம் அவரது சொந்த ஊரான சக்கரமல்லூரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்தநிலையில், இசையமைப்பாளர் தேவாவின் சகோதரரான சபேஷின் மகனும் நடிகருமான கார்த்திக் சபேஷ் (37) உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

இந்தத் தகவலை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இவர் ‘வல்லவன்’, ‘பட்டத்து யானை’, ‘குளிர் 100°’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.தேவா இறந்த சோகம் மறைவதற்குள் அவர்களது குடும்பத்தில் மற்றுமொரு மரணம் நிகழ்ந்தமை அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கார்த்திக்கின் தந்தை சபேஷும்,  இசையமைப்பாளராக பல படங்களில் பணியாற்றியுள்ளார்.

தனது மற்றொரு சகோதரரான முரளி உடன் இணைந்து  படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார்.

அண்ணன் தேவாவின் படங்களிலும் பணியாற்றி உள்ளார்.

இவரும் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி காலமானமை குறிப்பிடத்தக்கது.

manel