மின்னல் தாக்கி இயந்திரப்படகு சேதம்!

மின்னல் தாக்கி இயந்திரப்படகு சேதம்!

வாழைச்சேனை துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்குச் சென்ற இயந்திரப் படகொன்று மின்னல் தாக்கியதில் சேதமடைந்துள்ளது.

இந்த சம்பவம் நேற்று (20) செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணியளவில் வாழைச்சேனை துறைமுகப் பகுதியில் இருந்து சுமார் 20 கிலோ மீற்றர் தொலைவில் வைத்து இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எம்.எம். அமீர் ஹாஜியார் என்பவருக்கு சொந்தமான IMUL – A – 0251 MTR இலக்க இயந்திரப் படகில் மீன் பிடிப்பதற்காக 4 பேர் சென்ற போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

பாரிய மின்னல் தாக்கத்தில் இயந்திரப் படகில் பொருத்தப்பட்டிருந்த BMS, ASI மற்றும் இயந்திரப் படகு வானொலி உள்ளிட்ட உபகரணங்கள் மின்னல் தாக்கி கருகி சேதமடைந்துள்ளன.

இவ்வாறு மின்னல் தாக்கி சிக்கிக் கொண்ட மீனவர்கள் எவ்வித ஆபத்துக்களுமின்றி இன்று (21) அதிகாலை ஒரு மணியளவில் பாதுகாப்புடன் வாழைச்சேனை துறைமுத்தை வந்தடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் படகு உரிமையாளர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.

manel