பிற்பகலில் இடியுடன் கூடிய மழை

பிற்பகலில் இடியுடன் கூடிய மழை

சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

அதேநேரம் நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான வானிலை நிலவும் எனவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனி நிலவக்கூடும். 

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். 

எஸ். ரஜீவன்

Related Posts