இலங்கை அணி பாகிஸ்தான் செல்கிறது

இலங்கை அணி பாகிஸ்தான் செல்கிறது

இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக ஶ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. 

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் சர்வதேச தொடர் மற்றும் சிம்பாப்வே, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு இருபதுக்கு 20 தொடர்களில் விளையாடுவதற்காக இலங்கை இவ்வாறு செல்லவுள்ளது. 

எதிர்வரும் 8 ஆம் திகதி இலங்கை ஆடவர் அணி பாகிஸ்தானுக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக ஶ்ரீ லங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

எஸ். ரஜீவன்