ஈரானின் மோசடி வலையமைப்பைத் தடை செய்தது அமெரிக்கா

ஈரானின் மோசடி வலையமைப்பைத் தடை செய்தது அமெரிக்கா

தடைசெய்யப்பட்ட தொழில்நுட்பங்களை வாங்குவதற்காக சிறு வணிகர்களைப் போல் நடித்ததாகக் கூறப்படும் ஈரானிய “மோசடி வலையமைப்பு” மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது.

ஈரானிய ஆயுதப் படைகளுக்காக தடைசெய்யப்பட்ட அமெரிக்க வன்பொருள் மென்பொருட்கள் ஆகியவற்றை வாங்கும் நோக்கில், அமெரிக்காவைச் சேர்ந்த சிறு வணிக நிறுவனங்களைப் போல் நடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பல ஈரானிய தனிநபர்கள் ,நிறுவனங்கள் மீது மத்திய அரசு வெள்ளிக்கிழமை அன்று தடைகளை விதித்தது.

சோரெனா ஹுஷ்மந்த் சமனே என்ற ஈரானிய நிறுவனம், “பல்வேறு அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், மறுவிற்பனையாளர்கள் விற்பனையாளர்களிடமிருந்து மில்லியன் கணக்கான டொலரை மோசடி செய்ததாக” கருவூலத் துறை குற்றம் சாட்டியுள்ளது.

அமெரிக்க வணிக நிறுவனங்களாக நடித்து, அந்த ஈரானிய நிறுவனமும், அதன் தலைவரும் மற்றும் பலரும், பொதுவாக அமெரிக்க ஏற்றுமதி கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட நெட்வொர்க் பாதுகாப்பு உபகரணங்களை வாங்கி ஈரானுக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

manel