மசகு எண்ணெய் விலை சரிவு!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீடித்து வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகளில் மாற்றம் பதிவாகியுள்ளது.
சர்வதேச சந்தை நிலவரங்களின்படி, அமெரிக்காவின் தரக்குறியீடாகக் கருதப்படும் WTI (West Texas Intermediate) ரக மசகு எண்ணெய்யின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 95.13 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதுடன், முந்தைய நிலவரத்துடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சியைக் காட்டியுள்ளது.
அதேநேரம், உலகளவில் அதிகளவில் வர்த்தகம் செய்யப்படும் பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய்யின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 96.74 அமெரிக்க டொலராக காணப்படுகிறது.
இந்நிலையில், இயற்கை எரிவாயு சந்தையில் விலை உயர்வு பதிவாகியுள்ளது.
அதன்படி, இயற்கை எரிவாயுவின் விலை 3.234 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளதாக சர்வதேச எரிசக்தி சந்தைத் தரவுகள் தெரிவிக்கின்றன.
மத்திய கிழக்கில் நிலவும் அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழ்நிலைகள், உலக எரிசக்தி விநியோகம் தொடர்பான அச்சங்களைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருவதால், எதிர்வரும் நாட்களிலும் எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகளில் மேலும் ஏற்ற இறக்கங்கள் ஏற்படக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

