ஹட்டன் கவ்வி வலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவ ஹோலிரோஸ்சரி தமிழ் மகா வித்தியாலயத்தின் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த விநாயகர் ஆலயத்தில் உள்ள விநாயகர் சிலைக்கு இனந்தெரியாதவர்களால் சேதம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக விசாரனைகளை ஆரம்பித்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் 16.04.2025.புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பாடசாலை வளாகத்திற்குள் நுழைந்த சந்தேக நபர்கள் வீதியில் கிடந்த கற்களை கொண்டு சிலையினை தாக்கியுள்ளனர்.
பாடசாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் சிலை உடைந்து காணப்பட்டதை அந்த பாடசாலையின் மாணவன் ஒருவர் இனங்கண்டு பாடசாலையின் அதிபருக்கு அறிவித்துள்ளார்.
பாடசாலையின் அதிபர் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு தடைவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரணகளை ஆரம்பித்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.