Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு சுவீடன் நாட்டவர் நன்கொடை
டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையையும் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்காக தொடங்கப்பட்ட‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அமைப்புகள், வர்த்தகர்கள் மற்றும் பரோபகாரிகள் நன்கொடைகளை வழங்கி வருகின்றனர்.
அதன்படி, சுவீடன் நாட்டைச் சேர்ந்த V.P. Nackholm நேற்று (16) 33,000 ஆயிரம் டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
நன்கொடை தொகையை அவர் வங்கியில் வைப்புச் செய்து அதன் பற்றுச்சீட்டை, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் கையளித்தார். கே.ஜே. தமாதரி பிரேமதாசவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

