மீகொடை தன்சல் விபத்து – இறுதி சந்தேகநபருக்கும் விளக்கமறியல்

மீகொடை சந்திக்கு அருகில் விபத்தை ஏற்படுத்தி 6 பேரின் உயிரிழப்புக்குக் காரணமான சம்பவத்தில் கெப் ரக வாகனத்துடன் தொடர்புடைய இறுதி சந்தேகநபரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம பதில் நீதவான் தரிந்து கமகே இன்று (07) உத்தரவிட்டார். 

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர் பன்னிப்பிட்டிய, பெலன்வத்த பகுதியைச் சேர்ந்த டொன் சரத் ஹெட்டிகே என தெரிவிக்கப்படுகின்றது. 

இச்சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட மேலும் மூன்று சந்தேகநபர்கள் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த (31) இடம்பெற்ற இந்த கோர வீதி விபத்தில் 6 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 7 பேர் காயமடைந்திருந்தனர். 

மீகொடை சந்தியில் நடைபெற்ற தன்சலுக்காக வரிசையில் காத்திருந்த மக்கள் மீது கெப் ரக வாகனம் ஒன்றில் விபத்தை ஏற்படுத்தி விட்டு சந்தேகநபர்கள் தப்பிச் சென்றனர். விபத்து இடம்பெற்ற போது, அந்த கெப் ரக வாகனத்தில் பயணித்தோரை பொலிஸார் தேடி வந்த நிலையில், அவர்கள் நீதிமன்றிலும், பொலிஸ் நிலையத்திலும் சரணடைந்த போது கைது செய்யப்பட்டிருந்தனர். 

கைதானவர்களில் விபத்தை ஏற்படுத்திய போது, அதனை செலுத்திய நபரும், அந்த வாகனத்தின் உரிமையாளர்.

manel