சரியாக வரலாறு கற்பிப்போம்

சரியாக வரலாறு கற்பிப்போம்

கல்வி மறுசீரமைப்பு யோசனை இன்னும், இறுதி செய்யப்படவில்லை எனவும் இது குறித்து யோசனை மற்றும் ஆலோசனை முன்வைக்க விரும்புவோருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, அவர் இதனை குறிப்பிட்டார்.

நாட்டின் வரலாற்றை பாதுகாக்கும் நோக்கிலேயே தொல்பொருள் சட்டங்கள் திருத்தப்படுகின்றன.

அதேபோல கல்வி மறுசீரமைப்பு என்பது பல காலமாக கலந்துரையாடப்பட்டு வந்ததொரு விடயம் என்பதுடன் அது தற்போதைய அரசாங்கம் புதிதாக கொண்டுவந்ததொரு விடயமல்ல.

எனவே, கல்வியியலாளர்கள் முதல் சாதாரண மக்கள் வரை கல்வித்துறையில் விரிவானதொரு மறுசீரமைப்புக்கு தேவை என வலியுறுத்துகின்றனர்.

அதற்காக, தேசிய கல்வி நிறுவகம் பல காலமாக செயற்பட்டுவரும் நிலையில், இந்த விடயத்துடன் தொடர்புடைய உள்ளுர் நிபுணர்களுடன் கலந்துரையாடியதுடன் வெளிநாடுகளின் அனுபவங்களையும் பெற்றுள்ளது.

manel

Related Posts