அயல்வீட்டாரோடு ஏற்பட்ட பிரச்சனையால் வளர்ப்பு நாயை தாக்கிய இளைஞன்.

அயல்வீட்டாரோடு ஏற்பட்ட பிரச்சனையால் வளர்ப்பு நாயை தாக்கிய இளைஞன்.

நானுஒயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஒயா எடின்புரோ தோட்டப் பகுதியில் வளர்ப்பு நாயை ஒன்றை இளைஞன் ஒருவன் காரசாரமாக தாக்கி அந்த வளர்ப்பு நாயை ஆறு ஒன்றில் தூக்கி எரியும் காட்சி சமூக தளங்களில் வைரலாகியுள்ளது.

அயல்வீட்டாருக்கும் வளர்ப்பு நாய் மீது தாக்குதல் நடாத்தும் இளைஞனின் குடும்பத்தாருக்கு உள்ள பலய விரோதம் காரணமாக இந்த வளர்ப்பு நாயினை குறித்த இளைஞன் தாக்கிய வீசியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தொடர்பில் குறித்த 15வயது இளைஞன் நானுஒயா பொலிசாரினால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் வைத்து பிணை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆகவே மிருகங்கள் சித்திரவதை சட்டதிட்டத்திற்கமைய அந்த இளைஞனுக்கு எதிராக சட்ட நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

manel