இலங்கை இந்திய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய நிர்வாகிகள் ஒன்றுகூடல்!
இலங்கையின் பத்தாவது பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சரும் ஆளுங்கட்சியின் பிரதம கொரடாவுமான வைத்திய நளிந்த ஜயதிஸ்ஸவும் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயவர்தன மற்றும் பொருளாளராக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.







இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான சமூக, பொருளாதார, கலாசார தொடர்புகளையும் இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்புகளையும் வலுப்படுத்துவதை நோக்காக கொண்டு ஸ்தாபிக்கப்பட்டதே இலங்கை இந்திய பாராளுமன்ற நட்புறவு சங்கமாகும்.
இந்தியா, புதுடில்லியில் கடந்த 27ஆம் திகதி ஆரம்பமான இலங்கை இந்திய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய நிர்வாகிகள் ஒன்றுகூடல் ஒகஸ்ட் 31 ஆம் திகதி வரை நடைபெற்றுவருகிறது. இலங்கையிலிருந்து ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது அவர்கள் இந்திய பாராளுமன்றத்தின் நடைமுறை விடயங்களை பார்வையிட்டதுடன் இந்திய நாடாளுமன்ற நட்புறவு உறுப்பினர்களுடன் அரசியல் தலைமைத்துவம், கல்வி முறைகள், சட்டங்கள் இயற்றுதல் போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

