ஊட்டச்சத்து மருந்து பெற நின்ற சிறுவர்களுக்கு நேர்ந்த கதி
மத்திய காசாவில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு முன்பாக, ஊட்டச்சத்து மருந்துகளுக்காக வரிசையில் நின்றவர்கள்மீது நடத்தப்பட்ட, இஸ்ரேலிய படையினரின் தாக்குதலில் எட்டு சிறுவர்கள் உட்பட்ட 15 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
டெய்ர் அல்-பலாவில் உள்ள அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனை பகுதியிலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்தநிலையில், இஸ்ரேலியர்களின் இந்த தாக்குதல், சர்வதேச சட்டத்தின் அப்பட்டமான மீறல் என்று அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட உதவிக் குழுவான ப்ராஜெக்ட் ஹோப் (Project Hope) குற்றம் சுமத்தியுள்ளது.

