சாதாரண தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு டிசம்பர் 02 நள்ளிரவு முதல் தடை

2026 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குரிய மேலதிக வகுப்புகளை நடத்துவதற்கு டிசம்பர் 02 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் இவ்விடயம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இதன்படி குறித்த காலப்பகுதியில் பாடரீதியான விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 08 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

