குசல் மெண்டிஸுக்கு SSC கழகத்தில் உயரிய கௌரவம்

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள குசல் மெண்டிஸுக்கு கௌரவம் அளிக்கும் வகையில், அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் கொழும்பு SSC (Sinhalese Sports Club) விளையாட்டுக் கழகத்தின் விளையாட்டு மண்டபத்தில் அவரது உருவப்படம் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும், SSC விளையாட்டுக் கழகத்தின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.இதற்கு முன்னர், இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களான துலீப் மெண்டிஸ், அர்ஜுன ரணதுங்க, மார்வன் அத்தப்பத்து, மஹேல ஜயவர்தன மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோருக்கும் இந்த உயரிய கௌரவம் வழங்கப்பட்டிருந்தது.
அந்த வகையில், SSC விளையாட்டுக் கழகத்தில் இவ்வாறான கௌரவத்தைப் பெற்றுக்கொண்ட ஆறாவது வீரராக குசல் மெண்டிஸ் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
மேலும், இலங்கைக்கு அதிக எண்ணிக்கையிலான டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர்களை உருவாக்கிக் கொடுத்த விளையாட்டுக் கழகம் என்ற பெருமையையும் SSC கழகம் தன்வசப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

