புரட்சிகர மக்கள் சக்தியின் ஆறாவது ஆண்டு நிறைவு விழா

புரட்சிகர மக்கள் சக்தியின் ஆறாவது ஆண்டு நிறைவு விழா மற்றும் புதிய பதவிகள் வழங்கும் நிகழ்வு தலவாக்கலையில் ஆரம்பம்
இலங்கை தேர்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியான புரட்சிகர மக்கள் சக்தி (Revolutionary People’s Power) கட்சியின் ஆறாவது ஆண்டு நிறைவு விழா இன்று (28) காலை 10.30 மணியளவில் தலவாக்கலை கதிரேசன் கோவிலின் பிரதான மண்டபத்தில் ஆரம்பமானது.
கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், பிரதிநிதிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட சுமார் 100 முதல் 150 பேர் வரையிலானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, கட்சியின் புதிய உறுப்பினர்களுக்கு பதவிகள் வழங்குதல் மற்றும் நியமனக் கடிதங்களை கையளிக்கும் விசேட நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கட்சியின் பிரதான செயலாளரான சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரனின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், புரட்சிகர மக்கள் சக்தியின் ஆறு வருட அரசியல் பயணம் நினைவுகூரப்பட்டது.
அத்துடன், இதுவரை கட்சி அடைந்துள்ள வெற்றிகள், எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் மக்களுக்கான சேவையில் கட்சி கொண்டுள்ள அர்ப்பணிப்பு தொடர்பாகவும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.

