ஹோமாகம மற்றும் பெலன்வத்தை பகுதிகளில் 12 மணிநேர நீர்வெட்டு

ஹோமாகம மற்றும் பெலன்வத்தை பகுதிகளில் 12 மணிநேர நீர்வெட்டு

நிலவும் வறட்சியான வானிலை காரணமாக இன்று (09) மற்றும் நாளை (10) ஹோமாகம மற்றும் பெலன்வத்தை பகுதிகளில் 12 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, ஹோமாகம பகுதியில் இன்று (09) இரவு 8.00 மணி முதல் நாளை (10) காலை 8.00 மணி வரை நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

ஹோமாகம நகரம், வேகந்த வீதி, பின்கெத்த வீதி, வலவ்வ வீதி, கெமுணு மாவத்தை, அத்துருகிரிய வீதி, கலவிலவத்தை, நியந்தகல, மஹகடுவான, மாகம்மன, தெனிய மற்றும் தியகம பல்கலைக்கழகம் ஆகிய பகுதிகளுக்கு இந்த நீர்வெட்டு அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

அதேபோல், பெலன்வத்தை, சித்தமுல்ல, எருவ்வல, நிவன்திடிய, போகுந்தர வீதி, ரத்மல்தெனிய, மஹரகம – பிலியந்தலை வீதி, மொரகெட்டிய வீதி, ஹிரிபிட்டிய, கொரகபிட்டிய வீதி, நியந்தகல வீதி – தொலேகடே சந்தி, குடமாதுவ முதல் 255 பஸ் வீதியின் வயல் வரை, புபுது மாவத்தை முதல் 255 பஸ் வீதியின் வயல் வரை ஆகிய பகுதிகளில் நாளை (10) காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

manel