வெளிநாட்டு உதவியை நிர்வகிக்க அவசர ஒருங்கிணைப்புப் பிரிவு

வெளிநாட்டு உதவியை நிர்வகிக்க அவசர ஒருங்கிணைப்புப் பிரிவு

வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கான நிவாரண சேவைகளை நிர்வகிப்பதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு இணைந்து அவசர ஒருங்கிணைப்புப் பிரிவை நிறுவியுள்ளது. 

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள், இலங்கையில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திர நிறுவனங்கள் மற்றும் ஏனைய தரப்பினர்களிடமிருந்து பெறப்படும் உதவிகளை ஒருங்கிணைப்பதற்காக இந்த அவசர ஒருங்கிணைப்புப் பிரிவு செயற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அனைத்து உதவிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்படும் என்றும், செயல்முறையின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்படும் என்றும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. 

எஸ். ரஜீவன்

Related Posts