கண்டியிலும் நுவரெலியாவிலும் பலத்த மழைக்கு வாய்ப்பு

கண்டியிலும் நுவரெலியாவிலும் பலத்த மழைக்கு வாய்ப்பு

தாழமுக்கமானது காங்கேசன்துறையிலிருந்து சுமார் 300 கி.மீ வடகிழக்கே வடக்கு அகலாங்கு 12.3°N இற்கும் கிழக்கு நெட்டாங்கு 80.6°E இற்கும் அருகில் மையம் கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

இந்த அமைப்பு மேலும் நாட்டிலிருந்து விலகி, வடக்கு நோக்கி நகர்ந்து, மேலும் வலுவிழக்கும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

வடக்கு, மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். 

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் ஒருசில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

எஸ். ரஜீவன்

Related Posts