மன்னார் – மதவாச்சி வீதியில் சொகுசு பஸ் விபத்து

மன்னார் – மதவாச்சி வீதியில் சொகுசு பஸ் விபத்து

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பயணிகள் பேருந்து ஒன்று மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் பெரியகட்டு பகுதியில் இன்று (22) அதிகாலை விபத்திற்குள்ளானது. 

பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த விபத்தில் பலர் காயமடைந்து செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எஸ். ரஜீவன்

Related Posts