திருகோணமலையில் கிழக்கு மாகாணத்தின் பிரம்மாண்டமான வெசாக் தோரணம்
கிழக்கு மாகாணத்திலேயே மிகப்பெரிய மற்றும் பிரம்மாண்டமான வெசாக் தோரணம், திருகோணமலை மரக்கறி சந்தை வெசாக் விழாக்குழுவினரால் இம்முறை மிகச் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக 44ஆவது ஆண்டாக முன்னெடுக்கப்படும் இந்த வெசாக் விழா நிகழ்வின் அங்கமாக, இந்த பிரம்மாண்டமான தோரணம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான தோரணம் ‘சத்த மானவக ஜாதகக் கதை’யை மையமாகக் கொண்டு கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறித்த வெசாக் தோரணத்தின் திறப்பு விழா நேற்று (மே 30) மாலை இடம்பெற்றது. கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, தோரணத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வை முன்னிட்டு, அப்பகுதியில் வெசாக் கலை மற்றும் கலாசார வலயமும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இப்பிரதேச மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் இந்த வெசாக் தோரணமும், கலை வலயமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.