தட்டம்மை பரவல் – கைதிகள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படமாட்டார்கள்!
தட்டம்மை தொற்று பரவல் காரணமாக, 3 சிறைச்சாலைகளின் எந்தவொரு கைதியும் இன்றைய தினம் (9) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படமாட்டார்கள் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை, மெகசின் சிறைச்சாலை மற்றும் வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள கைதிகள் இவ்வாறு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நீதிமன்றுக்கு அறிக்கையிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

