இலங்கையில் இந்த ஆண்டில் டெங்கு பாதிப்பு ஒரு இலட்சத்தைக் கடந்தது – 81 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் இந்த ஆண்டில் டெங்கு பாதிப்பு ஒரு இலட்சத்தைக் கடந்தது – 81 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 107,651 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 81 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் புள்ளிவிபரங்களின்படி, நவம்பர் மாதத்தின் முதல் ஏழு நாட்களில் மாத்திரம் 1,399 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் ஜூலை மாதத்தில் பதிவாகியுள்ளனர். அந்த மாதத்தில் மாத்திரம் 29,964 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட ரீதியாக கம்பஹா, கொழும்பு மற்றும் கண்டி மாவட்டங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மேலும், நாடளாவிய ரீதியில் 37 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு நோய்ப் பரவல் அதிக அபாயமுள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு, இன்று (09) முதல் விசேட நுளம்பு ஒழிப்புத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.

manel