இலங்கையில் முதன்முறையாக ஓட்டுநரில்லா பயணிகள் ட்ரோன் சேவை: கொழும்பு போர்ட் சிட்டியில் இன்று தொடக்கம்!

இலங்கையில் முதன்முறையாக ஓட்டுநரில்லா பயணிகள் ட்ரோன் சேவை: கொழும்பு போர்ட் சிட்டியில் இன்று தொடக்கம்!

மின்சாரத்தில் இயங்கும், விமானி இல்லாத பயணிகள் ட்ரோன் சேவையை இலங்கையில் அறிமுகப்படுத்துவதற்கான முதலாவது உத்தியோகபூர்வ நடவடிக்கை இன்று (11) கொழும்பு துறைமுக நகர (Port City) வளாகத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

பயணிகள் ட்ரோன் விமானங்களை அறிமுகப்படுத்தும் சீனாவின் Yi Hang (யீ ஹாங்) நிறுவனத்தின் பிரதிநிதிகள், கடந்த ஆகஸ்ட் மாதம் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சில் அமைச்சர் அனுர கருணாதிலக்க, பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு, அமைச்சின் செயலாளர் டபிள்யூ.டபிள்யூ.எஸ். மங்கள உள்ளிட்ட விமானப் போக்குவரத்து அதிகாரிகளுடன் இது தொடர்பான விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.

ஓடுபாதை தேவையற்ற eVTOL என அழைக்கப்படும் இந்த ட்ரோன் விமானங்கள் செங்குத்தாக மேலெழும்பவும் தரையிறங்கவும் கூடியவை.

சுற்றுலாத்துறை, பயணிகள் போக்குவரத்து மற்றும் அவசரகால சேவைகளுக்காக இவ்விமானங்களைப் பயன்படுத்துவது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை, பாதுகாப்பு அமைச்சு, விமானப்படை, தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, Port City ஆணைக்குழு, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, முதலீட்டுச் சபை மற்றும் விமான நிலைய அதிகாரிகள் உள்ளிட்ட பல நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு அவசியம் என அமைச்சு தெரிவித்துள்ளது.

manel