டிக்கோயா இரட்டை கொலை; இறுதி கிரிகைகள் இன்று!

டிக்கோயா இரட்டை கொலை; இறுதி கிரிகைகள் இன்று!

இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபருடன் பெண் ஒருவரும் பொகவந்தலாவ பெற்றோசோ பகுதியில் வைத்து கைது.

டிக்கோயா நகரப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் இடம் பெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் உட்பட பெண் ஒருவரும் பொகவந்தலாவ பெற்றோசா பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கைது சம்பவம் 23.05.2026
சனிக்கிழமை 04.30மணியளவில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபர் வயோதிப தம்பதினர் இருவரையும் 21ம் திகதி கொலை செய்துவிட்டு தலைமறைவாகியிருந்த நிலையில் உறவினர்களின் வீட்டில் மறைந்திருந்த நிலையில் குறித்த சந்தேக நபர் தொடர்பில் பொதுமக்களினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற பொகவந்தலாவ பொலிஸார் குறித்ந சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

இதேவேளை கொலையினை மேற்கொண்ட சந்தேக நபர் பதுளை பகுதியை சேர்ந்தவர் எனவும் கொழும்பு பகுதியில் வீடு ஒன்றில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்த கெம்பியன் பகுதியை சேர்ந்த பெண்ணோடு தொடர்பு வைத்திருந்து அப்பெண்ணின் சகோதரர் வீட்டில் தங்கியிருந்த நிலையில் இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் குறித்த பெண்ணுக்கும் இந்த சந்தேக நபருக்கும் பத்து நாட்கள் தொடர்பு இருந்ததாக தெரியவந்துள்ளது சந்தேக நபரிடம் இருந்த கலவாடப்பட்ட தங்க நகைகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்

ஹட்டன் – டிக்கோயா நகரில் உள்ள கடையொன்றில் தனியாக வசித்து வந்த வயோதிப தம்பதியினர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் தொடர்பிலான சீ.சீ.டிவி தொடர்பிலான கானோளி 22ம் வெளியிடப்பட்டது

இக்கொலையைச் செய்த நபர் அத்தம்பதியினரிடமிருந்த 18 பவுன் தங்க நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட தம்பதியினர்:
நீண்டகாலமாக குறித்த கடையில் வியாபாரம் செய்து, சமீபத்தில் வியாபாரத்தை நிறுத்திவிட்டு அங்கேயே தனியாக வாழ்ந்து வந்த 82 வயதுடைய எஸ். காளிமுத்து சத்திவேல் மற்றும் அவரது மனைவியான 82 வயதுடைய சகுந்தலாதேவி ஆகிய தம்பதியினராவர். இவர்களின் பிள்ளைகள் கொழும்பு பகுதியில் வசித்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்
சந்தேகநபரும்:
இந்த இரட்டைக்கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபரின் சில CCTV காட்சிகள் பொலிஸாரால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது சந்தேகநபர் சம்பவம் நடந்த நாள் காலை முதலே டிக்கோயா பகுதியிலுள்ள தங்க நகைக்கடைகளுக்குச் சென்று அப்பகுதியில் நடமாடியுள்ளதுடன், அவர் கொலை நடந்த கடையை நோக்கி நடைபாதையில் செல்லும் காட்சியும் அதில் பதிவாகியுள்ளது.

இக்குற்றவாளியை விரைவாகக் கைது செய்வதற்கு ஹட்டன் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியிருந்த நிலையில் ஊடகங்களின் ஊடாக வெளிகொணரப்பட்ட காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் உதவியுடன் நேற்று பெற்றோசா தோட்ட பொதுமக்கள் மற்றும் பொகவந்தலாவ பொலிஸார் ஆகியோரின் முயற்சியில் இரட்டைகொலைக்கு சம்பந்தப்பட்ட சந்தேக நபரை கைது செய்து ஹட்டன் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இந்த கைது சம்பவத்தின் போது பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொருப்பாதிகாரியும் பொலிஸ் பரீசோதகர் ருவான் மதுசங்க. பொலிஸ்கொஸ்தாபல் 8427நவரட்னம். பொலிஸ் கொஸ்தாபல் 90144தாரக்க. பொலிஸ்கொஸ்தாபல் 27224ஹேசான் ஆகியோர் இனைந்து இந்த சந்தேக நபரை கைது செய்தனர்.

சம்பவம் தொடர்பில் இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களையும் நாளைய தினம் ஹட்டன் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட உள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

இதேவேளை உயிர்ழந்த தம்பதியினரின் இறுதி கிரியைகள் இன்று டிக்கோய நகரில் உள்ள விடுதியில் இடம் பெற்று டிக்கோயா தரவாளை தோட்ட பொதுமையானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது இதன் டிக்கோயா நகரம் முலுவது வெள்ளை கொடிகள் பறவிடப்பட்டிருந்த நிலையில் பெருந்திரளான மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

manel