கொழும்பில் இடம்பெற்ற ரஷ்ய தேசிய தினக் கொண்டாட்டம்

கொழும்பில் இடம்பெற்ற ரஷ்ய தேசிய தினக் கொண்டாட்டம்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) ஆகியோர் நேற்று (10) கொழும்பிலுள்ள ITC ரத்னதீப ஹோட்டலில் நடைபெற்ற ரஷ்ய தேசிய தின நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கௌரவ உபாலி பன்னிலாகே இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான ரஷ்ய தூதுவர் மேதகு Levan S. Dzhagaryan, வருகை தந்த சிறப்பு விருந்தினர்களை வரவேற்றார்.

நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் கலாநிதி உபாலி பன்னில:

”இலங்கை மற்றும் ரஷ்ய கூட்டமைப்புக்கு இடையிலான உத்தியோகபூர்வ இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு, எதிர்வரும் ஆண்டில் (2027) 7 தசாப்தங்கள் (70 ஆண்டுகள்) நிறைவடையவுள்ளன. இது இரு நாடுகளின் வரலாற்றிலும் ஒரு புதிய மைல்கல்லாகும்.

சர்வதேச அரங்கில் இலங்கை பல்வேறு அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்ட போதெல்லாம், ரஷ்யா நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி வந்துள்ளது. இதற்காக இலங்கை அரசு சார்பாக தனது மனமார்ந்த நன்றிகளை” அவர் தெரிவித்துக்கொண்டார்.

இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதாரம், அரசியல், சமூகம் மற்றும் கலாச்சார ரீதியாக நிலவும் பல நூற்றாண்டு கால நட்பு, இலங்கையின் பல துறைகளின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாக அமைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகளும் நினைவு நிகழ்வுகளும் நடத்தப்பட்டன.

manel