வெப்பமான வானிலை குறித்து எச்சரிக்கை

வெப்பமான வானிலை குறித்து எச்சரிக்கை

பல மாகாணங்களில் நிலவும் வெப்பமான வானிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. 

இன்று (20) பிற்பகல் 03.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிக்கை நாளை (21) தினத்திற்கு செல்லுபடியாகும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பம் ‘அவதானம் செலுத்த வேண்டிய’ மட்டத்தில் காணப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, இது குறித்து அவதானம் செலுத்தி, மனித ஆரோக்கியத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு அந்த திணைக்களம், பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

manel