வளிமண்டலவியல் திணைக்களத்தின் சிவப்பு எச்சரிக்கை
வங்காள விரிகுடா கடல் பிராந்தியம் மற்றும் நாட்டைச் சுற்றியுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளுக்குப் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பான சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
இன்று (27) முற்பகல் 8 மணிக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பு அடுத்த 12 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு – மத்திய வங்காள விரிகுடா பிராந்தியத்தில் நிலவிய ‘அர்னாப்’ தீவிர புயல் மேலும் வலுவடைந்து ‘மிகத் தீவிர புயலாக’ மாற்றமடைந்து இன்று (27) அதிகாலை 02.30 மணியளவில் வட அகலாங்கு 15.9 மற்றும் கிழக்கு நெட்டாங்கு 85.4 க்கு அருகில், அதாவது காங்கேசன்துறையில் இருந்து சுமார் 890 கி.மீ வடகிழக்கு திசையில் மையம் கொண்டிருந்தது.
இது இன்று (27) பி.ப. 05.30 மணி வரை மேற்கு – வடமேற்கு திசையை நோக்கி நகரக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதுடன், அதன்பின்னர் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து நாளை முற்பகல் 11.30 மணியளவில் ஆந்திரப் பிரதேச கடற்கரையினூடாக இந்திய கரையை கடக்கவுள்ளதாக என எதிர்பார்க்கப்படுகிறது.
எச்சரிக்கை வகைக்குள் அடங்கும் கடல் பகுதிகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 80 -140 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், பலத்த இடிமின்னலுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும்.
அத்துடன், இக்கடல் பகுதிகளில் அலைகளின் உயரமானது சுமார் (3.0 – 4.0) மீற்றர் வரை உயரக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதுடன், இக்கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.
எனவே, அந்த கடல் பகுதிகளில் மறுஅறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும், அப்பகுதிகளில் ஏற்கனவே மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோர் பாதுகாப்பான பகுதிகளை நோக்கி நகருமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்துகிறது.

