மழையுடனான வானிலை: நாட்டில் மேலும் 28 டெங்கு அபாய வலயங்கள் அடையாளம்!
மழையுடனான வானிலை காரணமாக நாட்டில் டெங்கு நோயின் பரவல் மேலும் அதிகரித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், நாடளாவிய ரீதியில் மேலும் 28 டெங்கு அபாய வலய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டில் இதுவரை 105,097 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், டெங்கு நோயினால் 79 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக முறையான வேலைத்திட்டமொன்று அவசியம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் மருத்துவர் சாமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

