மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகள் திறப்பு
மேல் கொத்மலை நீரேந்து பகுதிகளில் நேற்று (26) பெய்த பலத்த மழை காரணமாக, குறித்த நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் நேற்று பிற்பகல் முதல் திறக்கப்பட்டுள்ளன.
நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் இதனை தெரிவித்தனர்.
குறித்த நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மேலும் மழை பெய்யுமாயின், நீர்த்தேக்கத்தின் ஏனைய வான் கதவுகளும் தானாகவே திறக்கப்படும் என்பதால், நீர்த்தேக்க அணைக்கட்டுக்குக் கீழ் பகுதியில் கொத்மலை ஓயாவின் இரு மருங்கிலும் வசிப்போர் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

