நாமல் இன்றும் நீதிமன்றுக்கு வருகை!
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (27) புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
எயார் பஸ் கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடைய விசாரணைகளுக்கு அமையவே அவர், சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வழக்கு கடந்த 13 ஆம் திகதி அழைக்கப்பட்டபோது முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்திற் கொண்டு, சந்தேகநபரை இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் முன்வைத்த காரணிகள் பரிசீலிக்கப்பட்ட பின்னரே, கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரமகவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய, குறித்த வழக்கு இன்று (27) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

