எட்டியாந்தோட்டை பிரதேச சபை வரவு செலவுத் திட்டம் தோல்வி
தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் உள்ள எட்டியந்தோட்டை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 4 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது, பெருந்தோட்டப் பகுதி தொடர்பாகக் கருத்து தெரிவிக்கையில் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.
அப்போது வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 13 வாக்குகளும், எதிராக 17 வாக்குகளும் பதிவாகின.
ஆதரவாக வாக்களிப்பதில் தவிசாளர் உட்பட 12 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி (UNP), ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP), பொதுஜன ஐக்கிய முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி, சர்வஜன அதிகாரம் (Sarvajana Balaya) மற்றும் சுயாதீன உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.

