அமெரிக்கப் பதிலைப் பெற்ற பிறகு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஈரான் திருத்தம் செய்யும்

அமெரிக்கப் பதிலைப் பெற்ற பிறகு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஈரான் திருத்தம் செய்யும்

சமீபத்திய அமெரிக்கப் பதிலைப் பெற்ற பிறகு, அமெரிக்காவுடனான சாத்தியமான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) உரையில் ஈரான் திருத்தங்களைச் செய்யும் என்று தஸ்னிம் செய்தி நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டது.

வரைவு ஒப்பந்தத்தின் சில கூறுகளை அமெரிக்கா திருத்தி தெஹ்ரானுக்குத் திருப்பி அனுப்பியதாக சனிக்கிழமை அமெரிக்க ஊடகங்களில் வெளியான செய்திகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, ஈரானும் வரைவு ஒப்பந்தத்தில் தனது சொந்தத் திருத்தங்களைச் செய்யும் என்றும், “இன்னும் எதுவும் இறுதி செய்யப்படவில்லை” என்றும் ஒரு தகவலறிந்த வட்டாரம் கூறியதாக தஸ்னிம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரான் தான் ஒப்புக்கொள்ளும் வரைவை மட்டுமே ஏற்கும் என்றும், அமெரிக்கா செய்துள்ள திருத்தங்கள் தெஹ்ரானின் ஒப்புதலைக் குறிக்கவில்லை என்றும் அந்த வட்டாரம் கூறியது.

ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிப்பது உள்ளிட்ட வரைவின் சில பகுதிகள் குறித்து அமெரிக்க ஜனதிபதி டொனால்ட் ட்ரம்ப் கவலைகளை எழுப்பியதாகவும், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்,ஈரானின் அணுசக்திப் பொருட்கள் தொடர்பாக, கடுமையான நிபந்தனைகளை அவர் விரும்பியதாகவும் அதிகாரிகளை மேற்கோள் காட்டி அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்தன.

manel