அனுமதி நிபந்தனைகளை மீறி கட்டப்பட்ட சுவர் இடிப்பு!
திருகோணமலை, நகரம் மற்றும் சூழல் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முருகபுரி கிராம அலுவலர் பிரிவில், உரிய அனுமதி நிபந்தனைகளை மீறி சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்புச் சுவர் ஒன்று அதிகாரிகளால் இடித்து அகற்றப்பட்டுள்ளது.
இப்பகுதியில் கட்டடங்களை அமைப்பதற்கென வழங்கப்பட்டிருந்த அங்கீகரிக்கப்பட்ட அனுமதிப் பத்திரத்தின் விதிமுறைகளையும், நிபந்தனைகளையும் மீறி இந்தச் சுவர் கட்டப்பட்டிருந்ததாகத் தெரியவருகிறது.
இது குறித்துக் கிடைத்த புகார்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் நகர சபையினரால் கட்டட உரிமையாளருக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன.
எனினும், விதிமுறைகளுக்கு இணங்காத பின்னணியில், தகுந்த சட்ட நடைமுறைகள் மற்றும் அனுமதித் தேவைகளைப் பின்பற்றி, குறித்த சுவர் இடித்து அகற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக அதிகாரிகள் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

