விருது விழாவை ஆக்கிரமித்த 500 பாண் ஆடை

விருது விழாவை ஆக்கிரமித்த 500 பாண் ஆடை

ஆபிரிக்க திரையுலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் 12ஆவது ‘ஆபிரிக்க மேஜிக் வியூவர்ஸ் சாய்ஸ் விருதுகள்’ (AMVCA) நைஜீரியாவின் லாகோஸ் நகரில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

திரைப்பட விருதுகளைத் தாண்டி, ஃபெஷன் மற்றும் கலாசாரத்தின் ஒரு மாபெரும் கண்காட்சியாகவே இந்த இரவு அமைந்தது.

இதன்படி இந்த ஆண்டின் அதிக பேசுபொருளான நிகழ்வாக அமைந்தது ரியாலிட்டி ஸ்டார் குயின் மெர்சி அடாங்கின் தோற்றம்.

தனது ரொட்டித் தயாரிப்பு வணிகத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில், 500 இற்கும் மேற்பட்ட பாண்களால் உருவாக்கப்பட்ட ஆடையை அணிந்து அவர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கானா நாட்டின் ஆடை அலங்கார நட்சத்திரமான நானா அகுவா அடோ, ஜெர்மனியின் ‘கொலோன் கதீட்ரல்’ (Cologne Cathedral) தேவாலயத்தின் வடிவமைப்பால் ஈர்க்கப்பட்ட வெள்ளி நிற ஆடையை அணிந்திருந்தார்.

இதற்காக அவரது குழுவினர் 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் உழைத்துள்ளது.

திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் கதைசொல்லலில் சாதனை படைத்தவர்களைக் கௌரவிக்கும் இந்த விழா, ஆபிரிக்காவின் கலைத் திறமையை மீண்டும் ஒருமுறை உலகிற்குப் பறைசாற்றியுள்ளது.

manel