இந்திய பாதுகாப்பு அமைச்சரின் வரவேற்பு நிகழ்வில் விசேட அதிதியாகக் கலந்துகொண்டார் பிரதி அமைச்சர்
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களை வரவேற்கும் நிகழ்வு நேற்று (08.09.2026) தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் விசேட அதிதியாகக் கலந்துகொண்டார்.
இதேவேளை மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்ரி அவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
இதன்போது அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் கொழும்பில் உள்ள இந்திய சமூகத்தினரையும் சந்தித்தார்.
அத்துடன் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரையும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் 38 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கைக்கு வருகை தந்துள்ளமை இந்த விஜயத்தை மேலும் சிறப்பு வாய்ந்ததாக ஆக்கியுள்ளது.

