10 நாட்கள் வெள்ளத்தில் சிக்கியிருந்த இருவர்உயிருடன் மீட்பு!
நேபாளத்தில் உள்ள திரிசூலி-3A நீர்மின் திட்டத்தின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுரங்கத்திற்குள் 10 நாட்களாக சிக்கியிருந்த இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இராணுவத்தினர் மற்றும் மீட்புக் குழுவினர் இணைந்து முன்னெடுத்த வெற்றிகரமான மீட்பு நடவடிக்கையின் மூலம், குறித்த இருவரும் பாதுகாப்பாக வெளியே கொண்டுவரப்பட்டுள்ளனர்.
இந்த மீட்பு நடவடிக்கையின் பிரத்யேக புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், 10 நாட்களுக்குப் பின்னரும் இருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மீட்கப்பட்ட இருவரின் தற்போதைய உடல்நிலை மற்றும் சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

