மன்னாரில் ஒன்றரை வயது குழந்தை விபத்தில் பலி
மன்னார், தாழ்வுபாடு தாராபுரம் வீதியின் துர்க்கி சிட்டி கிராமத்தில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளார்.
பேக்கரி உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று மோதியதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த குழந்தை மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் மன்னார், தாராபுரம் பகுதியைச் சேர்ந்த 01 வயது மற்றும் 06 மாதங்களான குழந்தை என தெரியவந்துள்ளது.
மன்னார் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, அக்மீமன, காலி – உடுகம வீதியின் படதுவ பகுதியில் காலி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை கடந்த பெண் பாதசாரி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த பாதசாரிப் பெண்ணும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், பாதசாரிப் பெண் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் படதுவ, போகஹவத்த பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் ஆவார்.
அக்மீமன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

