மடகாஸ்கரில் ஜனாதிபதி தப்பி ஓட்டம்: ஆட்சியை கைப்பற்றியது இராணுவம்
தென்கிழக்கு ஆபிரிக்க நாடான மடகாஸ்கரில் ஜனாதிபதி ஆண்ட்ரி ரஜோலினா அரசுக்கு எதிராக இளைஞர்கள் கடந்த மாதம் 25-ஆம் திகதி போராட்டத்தில் குதித்தனர்.
ஊழல், வறுமை, மின்சாரம் மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு உள்பட பல் வேறு பிரச்சினைகளால் ஜென் இசட் தலைமுறை யினர் தங்களது போராட் டத்தை கடந்த சில நாட்க ளாக தீவிரப்படுத்தினர்.இதில் பாதுகாப்பு படை யினருக்கும்
போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 22 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையே இளைஞர்களின் போராட்டத்துக்கு இராணுவத்தின் ஒரு பிரிவினர் ஆதரவு தெரிவித்தனர். ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்று அவர்கள் அழைப்பு விடுத்தனர். இதனால் இராணுவம் மூலம் ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக ஜனாதிபதி ஆண்ட்ரி ரஜோலினா குற்றம்சாட்டினார்.இந்த நிலையில் ஜனாதிபதி ஆண்ட்ரி ரஜோலினா நாட்டைவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
அவர் பிரான்ஸ் இராணுவ விமானத்தின் மூலம் நாட்டைவிட்டு வெளி யேறியதாக கூறப்படுகிறது.இராணுவ கிளர்ச்சியைத் தொடர்ந்து தனது உயிருக்கு பயந்து நாட்டைவிட்டு வெளியேறியதாக அவர் தெரிவித்தார்.இதுதொடர்பாக அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறும்போது, என் உயிரைப் பாதுகாக்க ஒரு பாதுகாப்பான இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற் பட்டது என்றார்.
அவர் தனது உரையில், ஜனாதிபதி பதவியை இராஜி னாமா செய்வதாக சொல்ல வில்லை. ஜனாதிபதி ஆண்ட்ரி ரஜோலினா தப்பி ஓடிவிட்ட தாக எதிர்க்கட்சி தலைவர் சிடேனி ராண்ட்ரியானா சோலோனியாகோ அறி வித்துள்ளார்.பிரான்சின் காலனி ஆதிக்க நாடாக மடகாஸ்கர் இருந்து வந்தது.
காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலையான பின்னும் மடகாஸ் கரில் தனது படைவீரர்களை பிரான்ஸ் நிலை நிறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

