திருகோணமலை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
திருகோணமலையில் நேற்று (01) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
திருகோணமலையில் உள்ள சீன துறைமுக நகர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 5 ஆம் கட்டை பகுதியில் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 59 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

